மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு

Bookmark and Share

மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு

கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சையைச் தொடர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்.

காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ். வாட்டாள் நாகராஜ் பற்றி விமர்சித்து பேசியது யுடுயூப்பில் இன்னமும் வைரலாகி வருகிறது.

Kamal Haasan ✔ @ikamalhaasan 
Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo

இந்த சூழ்நிலையில்தான் பாகுபலி 2 படம் இன்னும் சில தினங்களில் பல மாநிலங்களில் வெளியாக உள்ளது. இதில் சத்யராஜ் கட்டப்பாவாக நடத்துள்ளார்.

இப்பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளன கன்னட அமைப்புகள். தன்னுடைய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னுடைய நிலைப்பாடு குறித்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சத்யராஜ். தன்னால் பிரச்சினை வரும் என்று தெரிந்தால் இனி தன்னை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளார். இதற்கு தமிழ் திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions