தமிழக மக்களுக்கு பாகுபலி டீம் கொடுத்த சோகமான ஷாக்

Bookmark and Share

தமிழக மக்களுக்கு பாகுபலி டீம் கொடுத்த சோகமான ஷாக்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி படக்குழு அறிவித்திருந்தது. தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஐ-மேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மாறாக தெலுங்கு மற்றும் இந்தியில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டத்தை ஐமேக்ஸ் பார்க்க நினைத்த பாகுபலி தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions