பாகுபலியால் மீண்டும் உயிர்த்தெழும் மருதநாயகம்!!!

Bookmark and Share

பாகுபலியால் மீண்டும் உயிர்த்தெழும் மருதநாயகம்!!!

லட்சங்களில் படம் எடுத்த காலத்திலேயே முதன்முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தவர் கமல்ஹாசன்தான். 1986ல் வெளியான விக்ரம் படம்தான் அது. கமல்ஹாசன் தயாரித்து ஹீரோவாக நடித்த அப்படத்தில் அம்பிகா, லிசி மற்றும் ஹிந்தி நடிகை டிம்பிள் கபாடியா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் வில்லன் நடிகர் அம்ஜத்கான் நடித்தார். இப்படியாக பெரிய பட்ஜெட் படங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட கமல், சில வருடங்களுக்கு முன் அதாவது 1997 ஆம் ஆண்டில் மருதநாயகம் என்ற படத்தைத் தொடங்கினார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடங்கி வைத்த இந்தப் படத்தை பல கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மருதநாயகம் படத்தை டிராப் பண்ணினார் கமல். அப்படத்தை கமல் உடன் இணைந்து தயாரிக்க முன் வந்த வெளிநாட்டு பட நிறுவனம் பின்வாங்கியதே காரணம் என்று சொல்லப்பட்டது.

பின்னர் அமெரிக்கா செல்லும்போதெல்லாம் ஹாலிவுட் படநிறுவனங்களின் கதவைத்தட்டினார் கமல். அப்படியும் அவரது மருதநாயகம் கனவு நிறைவேறவில்லை. இது குறித்து கமலிடம் கேட்டபோதெல்லாம் படத்தின் பட்ஜெட்டை காரணம் சொன்னார். இதோ இன்றைக்கு ரூ.250 கோடியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பாகுபலி 300 கோடியைத்தாண்டி வசூல் செய்து வருகிறது.

பாகுபலி படத்தின் வெற்றி மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்கும் எண்ணத்தையும் தைரியத்தையும் கமலுக்குக் கொடுத்திருப்பதாகவும் விரைவில் மருதநாயகம் படத்தை அவர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions