ரூ.400 கோடிகளுக்கு காரணமான விஜயேந்திர பிரசாத்!

Bookmark and Share

ரூ.400 கோடிகளுக்கு காரணமான விஜயேந்திர பிரசாத்!

இந்தியத் திரையுலகில் தற்போது இரண்டு திரைப்படங்கள்தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

ஒன்று ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள பாகுபலி மற்றொன்று கபீர் கான் இயக்கத்தில் வெளிவந்துள்ள பஜ்ரங்கி பைஜான் இந்த இரண்டு படங்களும் இணைந்து தற்போது 400 கோடிகளுக்கும் மேல் உலக அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளன. இந்த இரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு.

இரண்டு படத்திற்கும் கதையை எழுதியிருப்பவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். பாகுபலி படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கொண்டிருக்க, பஜ்ரங்கி பைஜான் வெளியான மூன்று நாட்களுக்குள் 100 கோடி ரூபாயை வசூல் செய்துவிட்டது. இரண்டு படங்களும் இரண்டு வித்தியாசமான படங்கள்.

தமிழ் சினிமாவில் கதையாசிரியர்களுக்கென தற்போது தனி மரியாதை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. ஆனால், தெலுங்கிலும், ஹிந்தியிலும் அப்படியில்லை.

இன்னும் ஸ்டோரி ரைட்டர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், அங்கெல்லாம் விதவிதமான கதைகள் கொண்ட படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரே சமயத்தில் இரண்டு வித்தியாசமான கதைகளை எழுதிக் கொடுத்த விஜயேந்திர பிரசாத் இப்போது இந்தியத் திரையுலகின் வசூல் சாதனையை எங்கோ கொண்டு போய்விட்டார் என ஹிந்தித் திரையுலகனரே அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions