பாகுபலி பாதையில் ருத்ரமாதேவியின் பயணம்...!

Bookmark and Share

பாகுபலி பாதையில் ருத்ரமாதேவியின் பயணம்...!

பாகுபலி படத்தின் முதல் பாகத்தைப் பார்த்தவர்கள் அந்தப்படத்தின் விஷுல் காட்சிகளைப் பார்த்து மிரண்டு போய் படத்தை வெற்றிப் படமாக்கிவிட்டார்கள்.

இரண்டு கண்கள் போதாது என்று சொல்லுமளவிற்கு பிரம்மாண்டமான காட்சிகளுடன் திரையில் ரசிகர்களை அந்தப் படம் ரசிக்க வைத்ததற்கு மற்றுமொரு காரணமிருக்கிறது. அது திட்டமிட்டு செய்யப்பட்ட படத்தின் மார்க்கெட்டிங். படம் வெளிவந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அந்தப் படத்தின் சுமார் பத்தே பத்து புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.

அந்தப் புகைப்படங்களும் படத்தின் டிசைன்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களின் புகைப்படமாகவே இருந்தது.  இப்போது அதே வழியை ருத்ரமாதேவி குழுவினரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்.

முதலில் அனுஷ்காவின் ஒரு சில புகைப்படங்களை மட்டும் வெளியிட்டார்கள். அடுத்து அல்லு அர்ஜுன், புகைப்படத்தையும் மேலும் சில புகைப்படங்களையும் வெளியிட்டார்கள்.

இப்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் புகைப்படங்களாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அந்த விதத்தில் படத்தில் மற்றொரு நாயகியாக நடித்துள்ள கேத்தரின் தெரேசாவின் புகைப்படங்களை நேற்று வெளியிட்டார்கள்.

அழகான அந்தப் புகைப்படங்களைப் பற்றி நேற்று டோலிவுட்டே பேச ஆரம்பித்தது. மெட்ராஸ் படத்தின் நாயகியான கேத்தரின் தெரேசா ருத்ரமாதேவி படத்தில் அனாமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்து வைக்க உள்ளார்களாம்.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions