பாகுபலி வெற்றி எதிரொலி: சரத்திரப் படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்

Bookmark and Share

பாகுபலி வெற்றி எதிரொலி: சரத்திரப் படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நீண்ட வருடங்களாக தஞ்சை பெரிய கோவில் பற்றியும், சோழ மன்னர்களின் ஆட்சிமுறை, வாழ்க்கை முறை பற்றியும் ஆராய்ந்து வருகிறார். சோழர்களின் பின்னணியில் தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை சரித்திர படமாக எடுக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.

இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை செய்து வருகிறார். தற்போது பாகுபலி படம் வெற்றி பெற்றிருப்பது அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

படத்தின் பட்ஜெட் 200 கோடி என்பது தற்போதைய கணக்கு.  இதுபற்றி ஜனநாதன் கூறியதாவது:  ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாற்று பின்னணிதான் கதை களம்.

தமிழில் வரலாற்று படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. பாகுபலியின் வெற்றி அந்த தயக்கத்தை போக்கிவிட்டது. பாகுபலி  முழு கற்பனைக் கதை. கற்பனை துளியும் கலக்காத வரலாற்ற படம்தான் எனது திட்டம். கற்பனையை விட பிரமிப்பான விஷயங்கள் நிஜ வரலாற்றில் இருக்கிறது.

இந்தப் படத்தின் வாயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் உயரிய நாகரீக வாழ்க்கையை உலகத்துக்கு காட்ட இருக்கிறேன். இது பெரிய பட்ஜெட் படம். ஆரம்பிக்க சில ஆண்டுகள் ஆகலாம்.

அதற்கு முன்பு எனது பாணியில் ஒரு ஆக்ஷன் எண்டர்டெயின்மெண்ட் படம் இயக்க இருக்கிறேன். இந்த பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பித்து விடும் என்கிறார் ஜனா.


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions