கேரளாவிலும் சாதனை படைக்குமா பாகுபலி?

Bookmark and Share

கேரளாவிலும் சாதனை படைக்குமா பாகுபலி?

இந்தியத் திரையுலகில் இதுவரை படைக்காத வரலாற்றுச் சாதனையை படைக்க பாகுபலி குழுவினர் மும்முரமாக திட்டமிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 'பாகுபலி' படத்தை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தமிழில் எடுக்கப்பட்டுள்ள பாகுபலி தான் மலையாளம் பேச உள்ளது.

நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டை கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமெளலி , பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுவரை அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்குப் படங்களும்தான் டப்பிங் ஆகி அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. விஜய் நடித்த பல படங்கள் நேரடியாகவே தமிழில் வெளியாகியும் சாதனை புரிந்துள்ளன. ஐ போன்ற படங்களும் நல்ல வசூலைக் குவித்துள்ளன.

ஆனால், முதல் முறையாக அதிகமான திரையரங்குகள், மிகப் பெரிய வசூல் என கேரள மார்க்கெட்டில் சாதனை புரிய வேண்டும் என படத்தை வாங்கி வெளியிடும் குளோபல் யூனைடெட் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறதாம்.

இதுவரை ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில்லை என்கிறார்கள்.

எப்படியோ மலையாள உலகில் ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு மார்க்கெட்டிங் நடப்பதை மலையாளத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.<


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions