பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஸ்மிதாவின் பாடல்

Bookmark and Share

பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஸ்மிதாவின் பாடல்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. இதில் இடம் பெற்ற காலகேய வில்லன் கிளிக்கி என்னும் மொழியை பேசுவார். இந்த மொழியை இப்படத்திற்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. இந்த மொழியில் தற்போது ‘பாஹா கிளிக்கி’ என்னும் பாடல் ஒன்று உருவாகியுள்ளது.

750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் இது. இந்த பாடலை பிரபல பாப் பாடகி ஸ்மிதா உருவாக்கியிருக்கிறார். இவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘ஹே ரப்பா’ என்னும் பாடல் மூலம் பிரபலமானவர். 

இவர் தற்போது உருவாக்கியுள்ள ‘பாஹா கிளிக்கி’ பாடல், கேட்போரை ஆட்டம் போட வைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் தேவகட்டா. 

‘பாஹா கிளிக்கி...ராஹா கிளிக்கி...’ என்று தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions