ரசிகர்களை ஏமாற்றப்போகும் பாகுபலி.!

Bookmark and Share

ரசிகர்களை ஏமாற்றப்போகும் பாகுபலி.!

தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் பாகுபலி. இயக்குநர் ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது இப்படம் சம்பந்தமான ஒரு அதிர்ச்சி தகவல் வெளியே கசிந்துள்ளது. பாகுபலி படம் மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறதாம், முதல் பாகத்தில் அனுஷ்கா வரமாட்டார்.

இரண்டாம் பாகத்தில் தான் அவருடைய கதாபாத்திரம் வருகிறது என்பதுதான் அது. முதல் பாகத்தில் தமன்னாவை மையப்படுத்தி தான் கதையே நகர்கிறதாம். இதனை கேள்விப்பட்ட அனுஷ்காவின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களில் அனுஷ்காவை இதுவரை காட்டாத அளவுக்கு அழகாக காட்டியது மட்டுமில்லாமல் படத்தில் அவர் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் சொன்னீர்களே அந்த அழகு தேவதையை ஏன் இரண்டாம் பாகத்தில் மட்டும் வரும்படி செய்தீர்கள் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம் பலர்.

மன்னர்கள் காலத்து படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகமிருக்குமாம் இதனால் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி அருமையான பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறாராம் இசையமைப்பாளர் கீரவாணி.  


Post your comment





Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions