பாகுபலி - எதிர்பார்ப்பு எப்படி?

Bookmark and Share

பாகுபலி - எதிர்பார்ப்பு எப்படி?

நான் ஈ என்ற ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்து தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் 200 கோடி ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது?. 

சரித்திரக்காலப் படம், தமிழ் நடிகர்கள், பிரம்மாண்டமான அரங்குகள், அசர வைக்கும் எஃபெக்ட்ஸ் காட்சிகள் என அனைத்தும் இருந்தாலும் படத்தில் நாயகனாக தெலுங்கு நடிகர் பிரபாஸ், வில்லன் நடிகர் ராணா நடித்திருப்பது தமிழில் மிகப் பெரும் மைனஸாக இருக்கிறது என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் என்னதான் தமிழ் பேசி நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு அதிக அறிமுகமில்லாத அவர்களால் இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே கருதுகிறார்கள்.

அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் மட்டுமே படத்தில் தெரிந்த முகங்கள். இவர்கள் நடித்திருப்பதால்தான் இந்தப் படத்தினை தமிழிலும் ஓரளவிற்கு வியாபாரம் செய்ய முடிகிறது என்கிறார்கள். ஐதராபாத்தில் 40 திரையரங்குகளிலும், பெங்களூருவில் 25 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிபவர்களால் சென்னையில் வெறும் 13 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட முடிவதை வைத்து இந்தப் படத்திற்கு தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். வெளியூர்களிலும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்கிறார்கள்.

நேற்று பாகுபலி தமிழ் டிரைலர் 2 என்று ஒன்றை யுடியூபில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அதில் கடைசியில் வரும் எழுத்துக்களைத் தவிர வேறு எதிலுமே தமிழ் இல்லை. ஒரு வசனம் கூட தமிழில் இல்லாத டிரைலருக்கு தமிழ் டிரைலர் என வேறு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கில் டிக்கெட்டு விலையே 5000 ரூபாய் வரை போகும் ஒரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் மிகப் பெரும் அளவில் மார்க்கெட் செய்யவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions