பாகுபலி படத்தின் இரண்டாவது டிரைலர்

Bookmark and Share

பாகுபலி படத்தின் இரண்டாவது டிரைலர்

இயக்குநர் ராஜமௌலி சரித்திர பின்னணியில் உருவாக்கி வரும் பாகுபலி படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, படத்தின் எடிட்டிங்கை கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் கவனிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுவரை நாற்பது லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை இப்படத்தின் முதல் டிரைலர் கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூலை 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதால் அதற்கு முதல் வாரத்தில் டிரைலர் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் பாடல்களும் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions