புத்தகமாக வெளியாகும் பாகுபலி

Bookmark and Share

புத்தகமாக வெளியாகும் பாகுபலி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் வெளிவந்த இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. இதில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் மட்டும் வெளிவந்துள்ளது. தற்போது, இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தை காமிக் புத்தமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான வேலைகளிலும் மும்முரமாக களமிறங்கினர். 

இந்நிலையில், ‘பாகுபலி’ காமிக் புத்தகத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் வெளியாகும் சமயத்தில் இந்த புத்தகத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது. 

ஏற்கெனவே, பாகுபலி இரண்டாம் பாகத்தில் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதி 50 சதவீத படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions