லாபத்தை பங்கு போட்டுக்கொண்ட பாகுபலி வினியோகஸ்தர்

Bookmark and Share

லாபத்தை பங்கு போட்டுக்கொண்ட பாகுபலி வினியோகஸ்தர்

திரையுலகத்தில் ஒவ்வொரு படங்களுக்கும் நடக்கும் வியாபாரத்தில், லாபநஷ்டம் என்பது தவிர்க்க முடியாது. லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைக் கூட வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் இன்று வரை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

அதே சமயம் ரஜினிகாந்தை வைத்து பல படங்களை வாங்கி வினியோகம் செய்வதர்களும், திரையிட்டவர்களும் இதுவரை சம்பாதித்த லாபத்தை ரஜினிகாந்திடமோ அல்லது அவரை வைத்து படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களிடமோ பங்கு போட்டுக் கொண்டதில்லை.

அதே சமயம், நஷ்டம் என்றதும் ரஜினியிடம் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டுக் கொண்டு முரண்டு பிடித்து வருகிறார்கள். ஆனால், நமது பக்கத்துத் திரையுலகமான தெலுங்கு திரையுலகம் பாகுபலி படத்தை வாங்கி வெளியிட்டதில் கிடைத்த அதிக லாபத்தின் ஒரு பங்கை மீண்டும் தயாரிப்பாளருக்கே திருப்பித் தந்திருக்கிறார்கள். 

பாகுபலி படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய ப்ளூஸ்கை சினிமாஸ் என்ற நிறுவனம் அந்தப் படத்தை 9 கோடி ரூபாய் விலைக்கு வெளிநாட்டு உரிமை வாங்கியது. அந்தப் படத்தின் வசூல் மிகவும் அதிகமாக இருந்ததால் வந்த லாபத்தில் 4 கோடி ரூபாயை மீண்டும் தயாரிப்பு நிறுவனத்திடமே அளித்துள்ளது.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு நிறுவனமா என டோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்தில் உள்ளது. அப்படியென்றால் கண்டிப்பாக பாகுபலி 2 படத்தின் வினியோக உரிமையும் அவர்களுக்குத்தான் என்பது உறுதி...!


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions