பாகுபலி - தி கன்க்ளூசன்... இந்திய சினிமாவின் அடையாளம்!

Bookmark and Share

பாகுபலி - தி கன்க்ளூசன்... இந்திய சினிமாவின் அடையாளம்!

இரண்டு வருடம் உழைத்தோம், மூன்று வருடம் உழைத்தோம் என்று உழைப்பைச் சொல்லி மக்களைப் படம் பார்க்க அழைப்பது ஒருவிதம். அதே கடின உழைப்பை வாயால் கூறாமல் திரையில் காண்பித்து மக்களை இழுப்பது இன்னொரு விதம். பாகுபலி இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், டெக்னீசியன்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்பு மிளிர்கிறது. 

காட்சிகளில் பிரம்மாண்டம் காண்பித்து கதை வசனங்களில் ஜீவன் இல்லையென்றால் என்னதான் கடின உழைப்பென்றாலும் எடுபடாது. ஆனால் அத்தனை விதங்களிலும் ஒரு தரமான படைப்பாக பாகுபலி வந்திருக்கிறது. இனி இப்படி ஒரு படம், இந்த அளவு உணர்வைக் கொடுக்கும் படம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்படியே வரும் என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.

பாகுபலி முதல் பாகம் உங்களை வெகுவாகக் கவரவில்லை என்றால் பாகுபலி இரண்டாம் பாகம் நிச்சயம் கவரும். ஒருவேளை பாகுபலி முதல் பாகம் உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் இரண்டாம் பாகத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள். 

சில அதிமேதாவிகளைப் பார்க்க கொஞ்சம் பாவமாக இருக்கிறது. "இது எந்தப் படத்துலருந்து எடுத்துருக்காங்க தெரியுமா? அந்த சீன் எங்கருந்து சுட்டுருக்காங்க தெரியுமா?"ன்னுட்டு பினாத்திக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் பாத்த உங்களுக்குத்தாம்பா பிரச்சனை.. பாக்காதவங்களுக்கு என்ன பிரச்சனை? இவர்களெல்லாம் பாகுபலியின் ப்ரம்மாண்ட வெற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட படம் பார்த்த அனைவருமே பாகுபலிக்கு விமர்சனம் எழுதியிருப்பதால், நம்முடைய ஆங்கிளில் பாகுபலி கேரக்டர்களைப் பற்றி ஒரு சில வரிகள்.

விஷாலோட 'ஆம்பள' படத்து இண்டர்வல் காட்சியில அத்தை பொண்ணுங்கள கடத்துறதா நினைச்சி அத்தைங்கள சாக்கு மூடையில கட்டி கடத்திருவாங்க. மூட்டைய ஓப்பன் பண்ணுற சதீஷ், பிரபுகிட்ட, "அப்பா, அத்தை பொண்ணுங்க சூப்பர்"ம்பாறு. ப்ரபு மூட்டையில இருக்க பொண்ணுங்கள பாத்து ஷாக் ஆகி "டேய் அது அத்தை பொண்ணு இல்லடா... அத்தை" ன்னு சொல்லுவாறு. உடனே சதீஷ் திரும்ப, ரம்யா கிருஷ்ணன் முகத்த ஒருதடவ பாத்துட்டு "பரவால்லப்பா.."ம்பாறு. கிட்டத்தட்ட அதே நிலமைதான் நேத்து எனக்கும். ரம்யா கிருஷ்ணன் பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல இருந்த ஃப்ரண்டு, "இது ஹீரோயின் இல்லீங்க" னாரு. நா ரம்யா கிருண்ஷன இன்னொருக்கா பாத்துட்டு சதீஷ் மாதிரி "பரவால்லீங்க"ன்னுட்டேன். ரம்யா கிருஷ்ணன் ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்க... ச்ச... அவங்க இன்னும் ஹீரோயினாவே நடிக்கலாம்.


அனுஷ்கா அதுக்கும் மேல... செம கெத்து.... அனுஷ்கா ஆம்பளைங்க கூட்டத்துல நின்னாலே அவங்கதான் ஹீரோ மாதிரி தெரியும்.. இதுல பொண்ணுங்க கூட்டத்துல வேற ஃபுல்லா நிக்கிறாங்க.. சொல்லவா வேணும்... தனியா தெரியறாங்க. அவங்க ஹைட்டுக்கும், அந்த கண் பார்வைக்கும்.. அந்த கேரக்டருக்கு வேற யாரையும் நினைச்சிக் கூட பாக்க முடியல. நயன்தாரா மட்டும் ஓரளவுக்கு செட் ஆகலாம்.

அனுஷ்கா வெய்ட் கொஞ்சம் அதிகம்தான்.. சில இடங்கள்ல பிரம்மாண்டமா தெரியிது.

சத்யராஜ் வாழ்நாளில் இவ்வளவு முக்கியத்துவம் உள்ள கேரக்டரை செஞ்சிருக்க மாட்டாரு. கிட்டத்தட்ட ஹீரோவுக்கு ஈக்குவலான ரோல்... நடிப்புல பிரிச்சிருக்காரு.. முதல் முறையா ரம்யா கிருஷ்ணன பேர் சொல்லி கூப்டுறதும், க்ளைமாக்ஸ்ல நாசர்க்கு விளக்கம் குடுக்குறதுலயும் கெத்து காமிக்கிறாரு.

ராணாவைப் பாக்குறப்போல்லாம் உத்தமபுத்திரன் விவேக் வசனம்தான் மைண்ட்ல வந்துச்சி. நமக்கு ரெண்டே கஸ்டமருதான்.. ஒருத்தன் பெரிய முத்துக்கவுண்டன்.. இன்னொருத்தன் சின்ன முத்துக் கவுண்டன்.. ஒருத்தன் முரட்டு பீசு..இன்னொருத்தன் முட்டா பீசு.. அதே மாதிரிதான் ராணாவுக்கு ரெண்டே எதிரிதான்.. ஒருத்தன் அமரேந்திர பாகுபலி... இன்னொருத்தன் மகேந்திர பாகுபலி.. ஒருத்தன் பயங்கர பல்க்கா இருப்பான்... இன்னொருத்தன் பல்க்கா பயங்கரமா இருப்பான்.

ராணாவும் பிரபாஸூம் போட்டி போட்டு உடம்ப மெய்ண்ட்டெய்ண் பன்னிருக்காங்க.. பின்னால இருந்து பாக்கும்போது ராணாவா பிரபாஸான்னே கண்டுபுடிக்க முடியாத அளவு அதே ஹைட்டு.. அதே கட்டிங்ஸ்.. க்ளைமாக்ஸ்ல மட்டும் பிரபாஸ்க்கு விஎஃப்எக்ஸ்ல ரெண்டு எக்ஸ்ட்ரா கட்டிங்ஸ்.

படத்தோட இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் எம்எம் கீரவணி.. பாடல்களும் சரி.. பின்னணி இசையும் சரி... தெறிக்க விட்டுருக்காரு... அதுவும் இண்டர்வல் ப்ளாக்க்கு போட்டுருக்காரு பாருங்க... தரம். எந்த ஊருல சார் போய் ரெக்கார்டிங் பண்றீங்க? எங்காளுகளுக்கும் கொஞ்சம் சொல்லி விடுங்க.

ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களும் புல்லரிக்க வைக்கிறது. ராஜமெளலியின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்பதைத் தெரிஞ்சிக்க இப்பவே ஆர்வமா இருக்கு.

"தியேட்டர்ல எக்ஸ்ட்ரா காசு வச்சி விக்கிறான்... தெலுங்கு டப்பிங் படத்த நா ஏன் பாக்கணும், இது வந்து இங்கிலீஷ் சீரியலோட காப்பிடா.. அதுனால நா பாக்கமாட்டேண்டா" ன்னுலாம் எதாவது சொல்லிக்கிட்டு உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கிட்டு டவுன்லோடு பண்ணி பாக்க ஆசப்பட்டா பாருங்க.. நஷ்டம் அவங்களுக்கு இல்லை. ஏன்னா அவங்க ஆல்ரெடி சுல்தான், டங்கலயெல்லாம் தூக்கி சாப்ட்டு எங்கயோ பொய்ட்டாங்க. நஷ்டப்படப்போறது நீங்கதான். இந்த மாதிரி ஒரு படத்த தியேட்டர்ல பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இல்லாமலேயே போயிரும்!


Post your comment

Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர்
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions