பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!

Bookmark and Share

பாகுபலி வசூல் சாதனையை முந்திய பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் 50 லட்சம் செலவு செய்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் படம் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 50 நாட்களை கடந்தும் இன்னும் இப்படம் தெலுங்கில் 200 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாகுபலியின் தெலுங்கு பதிப்பு கொடுத்ததை விட இப்படம் அதிக லாபம் ஈட்டியுள்ளதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions