இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!

Bookmark and Share

இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!

இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியாகும் கூகுளின் டிரெண்ட் பட்டியலில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமைவிட பாகுபலி திரைப்படம் முன்னிலையில் உள்ளது. வழக்கமாக முன்னணி இடம் பிடிக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் நிகழ்வும் இந்த ஆண்டு பின் தங்கியுள்ளது. 

ஐ.பி.எல் போட்டியின் இடத்தை இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் பிடித்துக் கொண்டுள்ளது. 2015-ம் ஆண்டு கூகுளில் அதிக அளவு டிரெண்ட்டிங்கில் இருந்த டாப்-10 நிகழ்வுகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டி முதலிடத்தையும், பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான், ப்ரேம் ரதன் தான் பியோ (மெய் மறந்தேன் பாராயோ) ஆகிய திரைப்படங்கள் அடுத்த 3 இடங்களையும் பிடித்துள்ளது. 5 வது இடத்தில் ஐ.பி.எல் உள்ளது. 

மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 6 வது இடத்தைப் பிடித்துள்ளார். சிவில் சர்வீசஸ் தேர்வு, பிக் பாஸ் 9 தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டார் இணையதளம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


Post your comment





Related News
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா
டிஆர் கார்த்திகேயனை சந்தித்த ராணா: டிஆர்கே யாருன்னு தெரியும்ல?
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
போலீசிடம் மாட்டிய பிரபல நடிகர்- உதவ மறுத்த சக நடிகர்
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், தமன்னாவிற்கு பதில் முதலில் இவர்கள் தான் நடிக்கவிருந்தார்களா?
ராணா மட்டும் அல்ல இந்த பிரபலங்களும் குறைபாடை கடந்து வந்தவர்களே!
தன்னை போன்றே ஒரு கண் தெரியாத ஏழை தாய்க்காக கூலி வேலை பார்த்த ராணா
பாகுபலி-2விற்காக கலெக்டர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions