பாகுபலி-2 கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியது!

Bookmark and Share

பாகுபலி-2 கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தொடங்கியது!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக உருவாக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. முதல்நாள் படப்பிடிப்பில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் எல்லாம் உருவாக்கி அங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். முதல் நாள் படப்பிடிப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சுமார் 70 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். ராணா டகுபதி சிங்கப்பூரில் நடக்கும் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவிருப்பதால் ஜுன் 29-ந் தேதி முதல் ஜுலை 2-ந் தேதி வரை இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிகிறது. 

கிளைமாக்ஸ் காட்சியை முடித்துவிட்டு செப்டம்பரில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என நம்பப்படுகிறது. 


Post your comment





Related News
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா?
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?
பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை!
பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா?
கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்!
பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்!
பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது!
நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions