திருவிழாக்களில் பட்டையை கிளப்பும் பாகுபலி

Bookmark and Share

திருவிழாக்களில் பட்டையை கிளப்பும் பாகுபலி

இந்திய சினிமாவின் பிரமாண்ட திரைப்படங்களின் வரிசையில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய படம் ‘பாகுபலி’. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் உச்சம் தொட்ட இந்த படம் தென் இந்தியாவையும் தாண்டி வெற்றிக்கொடி நாட்டியது. குறிப்பாக வடமாநிலங்களிலும் ‘பாகுபலி’ படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

தற்போது மகா சங்கராந்தியையொட்டி அங்கு பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பாகுபலியின் போஸ்டர் கொண்ட பட்டங்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த பட்டங்களை வாங்கும் பாகுபலி ரசிகர்கள் தங்கள் மொட்டை மாடியில் நின்றபடி செல்பியாக எடுத்து டுவிட்டரில் அப்லோட் செய்ய இதைப்பார்த்து உற்சாகமாக பாகுபலி நாயகன் பிரபாஸ் டிவிட்டரில் இந்த படங்களை ரீ–டுவிட் செய்து வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions