பாகுபலியையே முந்திய விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக் வசூல்

Bookmark and Share

பாகுபலியையே முந்திய விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக் வசூல்

சிரஞ்சீவியின் கைதி எண் 150 படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.மகன் ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150.

அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி 10 ஆண்டுகள் கழித்து நடித்த படம் இது. விஜய்யின் கத்தி ரீமேக்கான இந்த படம் நேற்று முன்தினம் உலக அளவில் 2 ஆயிரத்து 800 அரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.படம் வெளியான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. அதிவேகமாக ரூ.50 வசூல் செய்த தெலுங்கு படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 22.4 கோடி வசூல் செய்தது.

கைதி எண் 150 படம் ரிலீஸான முதல் நாள் ரூ.23.24 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பிரமாண்ட படமான பாகுபலியின் முதல் நாள் வசூல் சாதனையை சிரஞ்சீவியின் படம் முறியடித்துள்ளது.

கைதி எண் 150 படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ரூ.30 கோடியும், அமெரிக்காவில் ரூ.9 கோடியும் வசூல் செய்துள்ளது. சிரஞ்சீவியின் படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என சூப்பர் ஸ்டார்களை இணைக்கும் ராஜமௌலி
ஜல்லிக்கட்டு பற்றி முதல்முறையாக பேசிய பாகுபலி இயக்குனர்
'பாகுபலி'யை அடுத்து 'மகாபாரதம்'. ராஜமெளலியின் மெகா திட்டம்
ராஜமௌலி இந்த படம் எடுத்தால் அதில் நடிக்க நான் ரெடி – அமீர்கான்!
திருட்டுத்தனமாக வெளியான பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் நீக்கம்
பாகுபலி 2 கிளைமாக்ஸ் காட்சியை லீக் செய்தவர் கண்டுபிடிப்பு? அதிர்ச்சியில் திரையுலகம்!
ராஜமௌலியின் அண்ணனும் இயக்குனர் ஆகிறார்
பாகுபலி முதல் பாகத்தை விட 2-ம் பாகம் சுலபம் – ராஜமௌலி!
பாகுபலி-2: பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த ராஜமௌலி
பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions