பாகுபலி வசூலை முந்திய தனி ஒருவன்!

Bookmark and Share

பாகுபலி வசூலை முந்திய தனி ஒருவன்!

இந்திய அளவில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பிரமாண்ட படமான பாகுபலியில் பிரபாஸ், ராணா போன்ற தெலுங்கு நடிகர்களே ஹீரோ-வில்லன் என நடித்திருந்தபோதும் அப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. தற்போது வரை பல தியேட்டர்களில் அப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது அதன்பின் வெளியான ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தொடக்கத்திலிருந்தே பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது. 

அதற்கடுத்த வாரத்தில் விஷாலின் பாயும்புலி உள்ளிட்ட சில படங்கள் வெளியானபோதும் தனிஒருவன் வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் பாயும்புலி வெற்றி பெறாததால் இப்போதுவரை தனி ஒருவன் தனியாக நின்று வசூலித்துக்கொண்டிருக்கிறது.

அதோடு, தமிழ்நாட்டில் பாகுபலி வசூலித்ததை தற்போது அந்த வசூலை தனிஒருவன் முறியடித்து விட்டதாம். அது மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஜெயம்ரவியின் படங்களுக்கு இதுவரையில்லாத வரவேற்பு இந்த படத்துக்கும் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

மேலும் கிளாமர், குத்துப்பாட்டு என்பதை தவிர்த்து நல்ல கருத்துள்ள படம் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த தனிஒருவன் படம் மூலம் புரிந்து கொண்ட பல டைரக்டர்கள் இப்போது தனிஒருவன் போன்று தரமான கதைகளை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions