பாட்ஷா பாணியில் அஜீத்தின் 56வது படம்!

Bookmark and Share

பாட்ஷா பாணியில் அஜீத்தின் 56வது படம்!

சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதற்கடுத்தபடியாக அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். அந்த படத்தை 1980ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் ரஜினிக்கு 4 தம்பிகள் இருப்பது போலவே கதை பண்ணியிருந்தார் சிவா.  

அப்படி அஜீத் நடித்த வீரம் படம் வெற்றி பெற்றதால் மீண்டும், அஜீத்தை இயக்கும் 56வது படத்திலும் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் கதையைப் போன்ற சாயலில் ஒரு கதையை தற்போது உருவாக்கியிருக்கிறார் சிவா.

குறிப்பாக, பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ டிரைவராக வருவது போன்று இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக நடிக்கிறார். அதேபோல் அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருப்பார்.

இந்த படத்தில் அஜீத் கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வருகிறாராம். ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் அஜீத்தின் கேரக்டர் பாட்ஷா ரஜினியைப்போன்று இடைவேளைக்கு பிறகு அதிரடியாக மாறி விடுமாம்.

அதையடுத்து ஆக்சன் காட்சிகளெல்லாம் உள்ளதாம். இதற்கெல்லாம் மேலாக பாட்ஷாவில் ரஜினிக்கு தங்கையாக யுவராணி நடித்தது போன்று இந்த படத்தில் லட்சுமிமேனன் நடிக்கிறார்.

இப்படி ரஜினியின் பாட்ஷா படத்தின் கதையை தழுவிதான் அஜீத்தின் 56வது படத்தின் கதையே உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்த மாதிரி பாட்ஷாவின் பல சாயல்கள் அஜீத் படத்தில் இடம்பெற்றிருப்பதாக அந்த படத்தில் பணியாற்றி வருபவர்களே சொல்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions