பாட்ஷா படத்தின் ‘தூண்’ காலமானார்!

Bookmark and Share

பாட்ஷா படத்தின் ‘தூண்’ காலமானார்!

ரஜினி, கமல் உட்பட பல பிரபலங்களுடன் பணியாற்றிய பிரபல சினிமா புகைப்பட கலைஞர் நேஷனல் செல்லையா (வயது 80) நேற்றிரவு காலமானார். இதுவரை இவர் சுமார் 1200 திரைப்படங்களில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார்.

இதற்காக தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளது.ரஜினியின் பாட்ஷாதான் இவர் கடைசியாக பணியாற்றிய படம். அதுவரை ஏறத்தாழ ரஜினியின் எல்லா படங்களுக்கும் இவர்தான் போட்டோகிராபராக இருந்தார்.

அந்தசமயத்தில் பாட்ஷா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இவர் எடுத்த புகைப்படங்கள்தான். இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions