பாட்ஷாவை கிண்டல் செய்து படம் எடுக்கும் விநியோகஸ்தர்

Bookmark and Share

பாட்ஷாவை கிண்டல் செய்து படம் எடுக்கும் விநியோகஸ்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் படம் பாட்ஷா. இந்தப் படத்தை கிண்டல் செய்து (ஸ்பூஃப்) படம் எடுக்க விநியோகஸ்தர் சிங்காரவேலன் முடிவு செய்திருக்கிறார். லிங்கா பட விவகாரத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு தலைமையேற்று செயல்பட்டவர்தான் இந்த விநியோகஸ்தர்.

ரஜினி வீட்டு முன் போராட்டம், உண்ணாவிரதம் என பல விஷயங்களை நடத்தியவர். தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடப்பட்டவர். அவர்தான் தற்போது பாட்ஷாவை கிண்டல் செய்து படம் எடுக்க இருக்கிறாராம்.

இதில் ரஜினியாக பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறாராம். வில்லன் ஆன்டனியாக ரகுவரன் நடித்த கேரக்டரில் மன்சூரலிகான் நடிக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகளை சிங்கார வேலன் செய்து வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions