டப்பிங் பேச மறுக்கும் பாபி சிம்ஹா!

Bookmark and Share

டப்பிங் பேச மறுக்கும் பாபி சிம்ஹா!

நேரம், ஜிகர்தண்டா படங்களின் வெற்றி காரணமாக அந்த படங்களில் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்தது.

அதனால் தற்போது நான்கைந்து படங்களில் அவர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படங்களும் பாபி சிம்ஹாவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன.

ஆனால், நேரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு பாபி சிம்ஹா நாயகனாக நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படம் கடந்த மாதமே திரைக்கு வர தயாரானது.

அதோடு அப்படத்தைப் பார்த்த பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர் மிகச்சிறந்த படம் என்றும் சர்டிபிகேட் கொடுத்தனர்.

அதனால் இந்த படம் வெளிவந்தால் பாபிசிம்ஹாவின் மார்க்கெட இன்னும் எகிறிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாபி சிம்ஹாவை அப்படத்துக்கு டப்பிங் பேச அழைத்தபோது, தனக்கு மேற்கொண்டும் கூடுதலாக பணம் தரவேண்டும் என்கிறாராம்.

ஆனால், படத்தை இயக்கி தயாரித்த மருதுபாண்டியனோ, முதலில் பேசிக்கொடுங்கள். படத்தை விற்பனை செய்து விட்டு தருகிறேன் என்கிறாராம். இன்னும் அவர்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக, என்னதான் ஹீரோவாக நடித்தபோதும் இன்னும் மனதளவில் வில்லனாகத்தான் இருக்கிறாராம் பாபி சிம்ஹா. 


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions