ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பாபு ஆண்டனி..!

Bookmark and Share

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பாபு ஆண்டனி..!

எண்பது-தொண்ணூறுகளில் மிரட்டலான வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகர் பாபு ஆண்டனி. குறிப்பாக 'பூவிழி வாசலிலே', 'சூரியன்' ஆகிய படங்களில் இவரது வில்லத்தனம் மிகுந்த பாராட்டை பெற்றது.

தற்போது இவரும் காலமாற்றத்தால் சில வருடங்களாகவே குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் இவர், தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய தேசியவிருது பெற்ற 'காக்கா முட்டை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து தனது சாதனை எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் பாபு ஆண்டனி. படத்தின் பெயர் ரொம்பவே வித்தியாசமானது. அதாவது 'புல்லட்ஸ், பிளேட்ஸ் அன்ட் பிளட்' (Bullets, Blades and Blood) என படத்தின் டைட்டிலே டெரர் ஏற்றுகிறது.

இதில் பாபு ஆண்டனிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பக்கா ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தை வாரன் பாஸ்டர் என்பவர் இயக்குகிறார்.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions