பாகுபலிக்கு குரு கிடைச்சாச்சு....!

Bookmark and Share

பாகுபலிக்கு குரு கிடைச்சாச்சு....!

மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் பாகுபலியில் நடிக்கும் யங் ரிபல் ஸ்டார் பிரபாசுக்கு வாள் சண்டை, குதிரை ஏற்றம் மற்றும் இதர வீர தீர திறன்களை சொல்லிக்கொடுக்கும் குரு கிடைத்திருக்கிறார்.

சுமார் ரூ 100 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் தயாராகிவரும் இந்த வரலாற்று சிறப்பு திரைப்படத்தில் பல்வேறு புதுமையான விஷயங்களை பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சேர்த்து படத்திற்கு மெருகு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் அந்த படத்தில் பிரபாசுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் போர் நுணுக்கங்கள் போன்றவற்றை கற்று தரும் குருவாக பிரபல மூத்த நடிகரும், எழுத்தாளருமான தனிகெள்ள பரணி நடிக்கிறார்.

பிரபல நடிகைகளான அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய் வருகின்றது. இதற்கு அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள் நிறைவடையவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த படத்தின் டிரைலர் வரும் மே 31ம்  தேதி வெளியாகும் என்று இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்கா மீடியா வொர்க்ஸ் சார்பாக பிரபல தயாரிப்பாளர்களான சோபு   யர்லகட்ட மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரிக்கின்றனர்.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions