1 கோடி வருமானத்தில் 'பாகுபலி' இசை வெளியீடு

Bookmark and Share

1 கோடி வருமானத்தில் 'பாகுபலி' இசை வெளியீடு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பாகுபலி' படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 31ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளின் இசை வெளியீட்டையும் ஒரே மேடையில் நடத்த உள்ளார்களாம்.

அந்த விழாவிற்கு தமிழிலிருந்து ரஜினிகாந்த், ஹிந்தியிலிருந்து அக்ஷய் குமார் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களையும் அழைக்க உள்ளார்களாம். யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த இசை விழா இதுவரை இல்லாத அளவிற்கு நடத்த வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம். பொதுவாக இம்மாதிரியான விழாக்களை நடத்துவதென்றால் குறைந்த பட்சம் 25 லட்ச ரூபாயாவது செலவாகும்.

ஆனால், இந்த 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிலிருந்து மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் வருமானம் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்களாம். அதற்காக ஈவன்ட் நடத்தும் நிறுவனங்கள் சிலவற்றுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

தனிப்பட்ட தொலைக்காட்சி உரிமை, இணையதள உரிமை இப்படி சிலவற்றின் உரிமையைக் கொடுத்தும் வருமானத்தைப் பார்க்க திட்டமிட்டுள்ளார்களாம். திரைப்பட மார்க்கெட்டிங் என்பது இப்போது வேறு ஒரு கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை 'பாகுபலி' படத்தின் இசை வெளியீடு மற்றவர்களுக்கும் புரிய வைக்கும்.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions