பிரபாஸின் அடுத்த பட இயக்குநர் யார்?

Bookmark and Share

பிரபாஸின் அடுத்த பட இயக்குநர் யார்?

தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே இயக்குநர் ராஜமௌலியின் “பாகுபலி” படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் கடைசி இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டியுள்ளது மற்றபடி படத்தின் இதர வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அந்த பாடல்களுக்காக தமன்னாவுடன் டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரபாஸ்.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியுள்ளதால் முதல் பாகத்தை ரிலீஸ் செய்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளாராம் ராஜமௌலி.

இந்த இடைவெளியில் பிரபாஸ் அடுத்த படத்தில் நடித்துவிட வேண்டுமென நினைத்திருக்கிறாராம். ஏற்கனவே இயக்குநர் சுஜித்துடன் தான் பிரபாஸ் இணையவிருக்கிறார்,  அப்படத்தை தயாரிப்பாளர் வம்சி, பிரமோத் ஆகிய இருவரும் தயாரிக்கப்போகிறார்கள் என்று செய்தி வெளியாகின, தற்போது இயக்குநர் தசரத்திடமும் கதையை கேட்டு அதை ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டு இயக்குநர்களில் பிரபாஸை வைத்து படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்று தெரியாத நிலையில், பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் தசரத்துடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களாம், பாகுபலியின் இரண்டு பாகம் வருவதற்குள் ஒரு நல்ல ஆக்ஷன் அல்லது காமெடி படத்தை இயக்குநர் தசரத்தால் கொடுக்க முடியும் என்று நம்புகிறார்கள் பிரபாஸின் ரசிகர்கள். பொருத்திருந்து பார்க்கலாம் அந்த அதிர்ஷ்டம் யாருக்கென்று.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions