ஆகஸ்ட் முதல் பாகுபாலி -2

Bookmark and Share

ஆகஸ்ட் முதல்  பாகுபாலி -2

தெலுங்கு திரையின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் சரித்திர திரைப்படமான பாகுபலி இரண்டு பாகங்களைக் கொண்டது. அதில் முதல் பாகத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளில் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும்  இப்படத்தில்  பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான பாகுபாலி 2 படத்தின் பணிகள்  ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து துவங்கும் என கூறப்படுகின்றது.

இதனை நடிகர் ராணா  உறுதிப்படுத்தியுள்ளார்.  முதல் பாகத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டாம் பாகத்திலும் பணியாற்றுவார்கள் என எதிபார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions