பாகுபலி-2': ரஜினிகாந்த் அல்லாத ஒருபடம் படைக்கும் புதிய சாதனை

Bookmark and Share

பாகுபலி-2': ரஜினிகாந்த் அல்லாத ஒருபடம் படைக்கும் புதிய சாதனை

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. இரண்டு பாகமாக  எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை  படைத்தது. இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து  மொழிகளுக்குமான இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ரூ.51 கோடி கொடுத்து  வாங்கியுள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் அல்லாத வேறொரு படம் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவது இதுவே முதல்முறை. 

முன்னதாக `பாகுபலி' படத்தின் முதல் பாகம் ரூ.45 கோடிக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தை ஏப்ரல் 28-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா,  சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions