'பாகுபலி 2' அடுத்த வருடம்தான் ரிலீஸ்?

Bookmark and Share

'பாகுபலி 2' அடுத்த வருடம்தான் ரிலீஸ்?

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகமே அடுத்த மாதம் வரை ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கப் போகும் படமாக 'பாகுபலி' படம் அமையப் போகிறது. ஜுலை மாதம் முதல் வாரத்தில் இப்படம் வெளிவந்து விடும் என்கிறார்கள்.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்த பின் ஒரு வருடம் கழித்துத்தான் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சுமார் 70 சதவீதம் வரைதான் முடிந்துள்ளதாம். மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வருடம் வரை நடக்கும் என்கிறார்கள்.

அதுவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்க படத்தின் நாயகன் பிரபாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை என இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். பிரபாஸைப் பொறுத்தவரையில் அவர் 'பாகுபலி' படத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

முதல் பாகத்திற்கான வெளியீட்டு வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தள்ளி வைக்கப்பட்ட படத்தின் இசை வெளியீட்டையும் விரைவில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்கள். தமிழ், தெலுங்கு உட்பட மற்ற பல மொழிகளிலும் டப்பிங் ஆகி இப்படம் வெளியாக உள்ளதால், மிகப் பெரும் வசூலை படம் ஈட்டித் தரும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடம் உள்ளதாம்.

ஹிந்திப் படங்களின் வசூலை விட இந்தப் படத்தின் வசூல் அதிகமாகி சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் படித்து வளர்ந்து, இங்கு சினிமாவைக் கற்றுக் கொண்ட ராஜமெளலி புரியப் போகும்  சாதனை நமக்கும் பெருமைதான்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions