நிறைவு பகுதிக்கு வந்தது பாகுபலி படப்பிடிப்பு

Bookmark and Share

நிறைவு பகுதிக்கு வந்தது பாகுபலி படப்பிடிப்பு

இந்திய சினிமாவின் பிரமாண்டமாக கருதப்படும் பாகுபலி படத்தின் படப்படிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது அது நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறது.

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ் நடிக்கிறார்கள். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், கீரவாணி (மரகதமணி) இசை அமைக்கிறார்.

தற்போது படத்தின் வசனகாட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கபட வேண்டியது இருக்கிறது. இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தெலுங்கு, தமிழில் டப்பிங் பணிகள் முடிந்து விட்டது. தமிழ் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் கீரவாணி 24 மணிநேரமும் படத்துக்கு பின்னணி இசை சேர்த்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 6 விஎப்எக்ஸ் ஸ்டூடியோக்கள் மற்றும்  ஹாங்காங், அமெரிக்காவில் உள்ள ஸ்டூடியோக்களில் விசுவல் எபெக்ஸ்ட் பணிகள் நடக்கிறது.

தேசிய விருது பெற்ற பி.எம்.சதீஷ் சவுண்ட் டிசைனராகவும், தெபஜிதி சால்மாஸ் சவுண்ட் மிக்சராகவும் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் டிஐ பணிகள் அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியிடப்பட இருக்கிறது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions