இணையத்தில் வெளியான பாகுபலி; தயாரிப்பாளர் போலீசில் புகார்

Bookmark and Share

இணையத்தில் வெளியான பாகுபலி; தயாரிப்பாளர் போலீசில் புகார்

தமிழ் சினிமாவுக்கு எப்படி இயக்குநர் ஷங்கர் அவரது பிரம்மாண்டத்தை காட்டுவாரோ அதுமாதிரி தெலுங்கிலும் அந்த பிரம்மாண்டத்தை காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி.

இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தை தான் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தை எடுப்பதாலோ என்னவோ படத்தின் 12 நிமிட காட்சியை யாரோ இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.

இதை அறிந்த ராஜமௌலி உடனே அவரது டெக்னிக்கல் டீமை வைத்து அந்த வீடியோவை இணையத்திலிருந்து அழித்திருக்கிறார், மேலும் அந்த வீடியோ எங்கேயாவது பதிவிறக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருக்கிறதா என்றும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒரு தடவை பாதிக்கப்பட்டுவிட்டதால் இனி பாகுபலி டீமிலிருந்து ஒரு மூச்சு காற்று கூட இயக்குநருக்கு தெரியாமல் வெளியாகாது என்றளவுக்கு கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செயலை செய்தவரை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார் அளித்தார் பாகுபலி தயாரிப்பாளர். போலீசும் உடனே இந்த வழக்கை கையில் எடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கி அவரை கண்டுபிடித்துள்ளது.

அது யாருமில்லை பிரபல கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர், பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளிலும் இவர் இருந்துள்ளதால்தான் இந்த காட்சிகள் அவர் கைக்கு சென்றுள்ளது, தற்போது அந்த வேலையில் அவர் இல்லையென்பதால் பாகுபலி படத்தின் காட்சிகளை இணையத்தில் ஏற்றியுள்ளார்.

இவரை போலீசார் கைது செய்துவிட்டனர். இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இசை கீரவாணி.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions