பாகுபலியில் 18 நிமிட காட்சியில் பிரபல நடிகர்!

Bookmark and Share

பாகுபலியில் 18 நிமிட காட்சியில் பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் ராஜமௌலியின் பிரமாண்டமான படைப்பான பாகுபலி பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த படத்தில் நடிக்கும் சில பிரபலங்களை பற்றி செய்திகள் வெளிவந்தே கொண்டு இருக்கின்றது. தற்போது அந்த படத்தில் பிரபல நடிகரான அதிவி சேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இவர் பிரபல நடிகரான பவன் கல்யாணின் பஞ்சா படத்தில் சிறப்பாக நடித்து இருந்தது நினைவிருக்கலாம். அதற்கு கை மேல் பலன்  கிடைத்து இருக்கின்றது. அவரது நடிப்பை பார்த்து பிரபல இயக்குனர் ராஜமௌலி, தனது பாகுபலியில் அவருக்கு சான்ஸ் கொடுத்து உள்ளார்.

பாகுபலியில் அதிவி சேஷ் 18 நிமிடமே வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நெகடிவ் கேரெக்டரில் நடிக்கிறாராம். அதாவது படத்தில் பல்லலாதேவாவின் மகனாக நடிக்கிறார்.

பல்லலாதேவா வேடத்தில் பிரபல நடிகரான டகுபதி ராணா நடிப்பது நினைவிருக்கலாம். அவருடைய காட்சிகள் 18 நிமிடமே வந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions