பாகுபலி பட பாடல்கள் வெற்றி - சக்சஸ் மீட் நடத்த முடிவு

Bookmark and Share

பாகுபலி பட பாடல்கள் வெற்றி  - சக்சஸ் மீட் நடத்த முடிவு

இந்திய திரை ரசிகர்களின் பெரும்எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முதல் தெலுங்கு படமான பாகுபலி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் மட்டுமல்ல தமிழ்,மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைக்கு வருகின்றது.

பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாகுபலி பட பாடல்கள் வெளியீட்டு விழா பின்னர் திருப்பதிக்கு மாற்றப்பட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தற்போது இப்படத்தின் பாடல்கள் எதிர்பார்த்ததை விட வரவேற்பு பெற்றுள்ளதால் பாடல்கள் வெற்றிக்கு சக்சஸ் மீட் வைக்க பாகுபலி படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சக்சஸ் மீட் நடத்த திட்டமிடப்படுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions