பாகுபலி புரமோஷனில் ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள்

Bookmark and Share

பாகுபலி புரமோஷனில் ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள்

இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான பாகுபலி திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும்  பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி  இயக்கி வருகின்றார்.இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார்.

பாகுபலி படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைக்கு வருகின்றது. இப்படத்தை ஹிந்தி பட இயக்குநர் கரண் ஜோகர் வழங்க   புளுஸ்கை நிறுவனம் திரையிடுகின்றது. ஜூலை 9 ஆம் தேதி இப்படத்திற்கான புரமோஷன் விழாவை பிரமாண்டமாக நடத்த கிரண் திட்டமிட்டுள்ளார். இதில்  பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ராஜமௌலி உள்ளிட்ட  படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாருக்கான் மற்றும் பல ஹிந்தி திரைப்பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions