பாகுபலி படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன?

Bookmark and Share

பாகுபலி படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன?

இந்தியத் திரையுலகில் இதுவரை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைய எந்திரன் படம் பெற்றிருந்தது. சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது பாகுபலி படம் முறியடித்துள்ளது. இப் படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் ராஜமௌலி படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு சுமார் 250 கோடி ரூபாய் என சொல்லியதாக தகவல் வெளியானது. ஆனால், படத்தின் உண்மையான தயாரிப்புச் செலவு இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 175 கோடி ரூபாய் ஆகியுள்ளதாம்.

இப்போது இந்தப் படத்தின் வெளிநாட்டு வியாபாரம் மும்முரமாக நடந்து வருகிறதாம். வெளிநாடுகளில் இந்தப் படம் பற்றி அனைவருக்கும் தெரிய வைப்பதற்காக ஒரு ஏ.வி யை (ஆடியோ, வீடியோ படம்) படத்தின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளதாம். அதில் படத்தின் தயாரிப்புச் செலவாக 175 கோடி ரூபாயை குறிப்பிட்டுள்ளார்களாம். இதன் மூலம் இந்திய அளவில் அதிகச் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் என்ற பெருமையை பாகுபலி படம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இரண்டு பாகத்திற்கும் சேர்த்துதான் அந்த செலவு என்கிறார்கள். அப்படியென்றால் எந்திரன் படத்தின் ஒரே பாகத்திற்கு செலவு செய்துள்ள 130 கோடி ரூபாய்தான் அதிகமானத் தொகையாக இருக்கும். பாகுபலி யின் இரண்டு பாகத்திற்கும் 260 கோடி ரூபாய் செலவு என்றால் மட்டுமே எந்திரன் சாதனையை முறியடிக்க முடியும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions