தமிழில் மட்டும் 50 கோடி, பாகுபலி யின் ஆச்சரிய வசூல்

Bookmark and Share

தமிழில் மட்டும் 50 கோடி, பாகுபலி யின் ஆச்சரிய வசூல்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் என பாகுபலி; படத்தைப் பற்றிச் சொன்னாலும், பல காட்சிகள் தெலுங்கு உதட்டசைவுடனே தமிழிலும் வெளியாகின. பிரபாஸ், தமன்னா டூயட் பாடல் மற்றும் சில வைட் காட்சிகள் தெலுங்கில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. படத்தைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும். இடைவேளைக்குப் பின்னர் போர்க்காட்சிகள் மட்டுமே அதிக நேரம் இடம் பெற்றுள்ளதால் அதில் மொழிப் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

இதனிடையே, நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை விட பாகுபலி படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றும் இன்றும் கூட பல திரையரங்குகளில் படம் ஏற்கெனவே அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாம். இதுவரையில் தமிழில் மட்டும் இந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

பிரபாஸ், ராணா என தமிழுக்கு அதிக அறிமுகமில்லாத ஹீரோக்கள் நடிக்கும் படம் என்பதால் பாகுபலி தமிழில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறாது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் தெரிந்த முகங்களாக இருந்ததால் அதை ரசிகர்கள் பெரிதாக நினைக்கவில்லை.

மேலும், முதல் பாகத்தை முடித்ததில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வி எழுந்து நிற்பதால், அதில் கட்டப்பா வாக சத்யராஜ் நடித்திருப்பதால், சமூக வலைத்தளங்களில் இதுவே ஒரு கிண்டலான கேள்வியாக எழுந்து படத்திற்கு நிறையவே பப்ளிசிட்டியைத் தேடிக் கொடுத்துவிட்டது.

படத்திற்கு ஷேர் ஆக மட்டும் 25 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்கிறார்கள். படத்தை வாங்கிய அனைவருமே லாபத்தைப் பார்த்துவிட்டார்களாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions