மே 15ல் 'பாகுபலி' முதல் பாகம் வெளியீடு...

Bookmark and Share

மே 15ல் 'பாகுபலி' முதல் பாகம் வெளியீடு...

'நான் ஈ' வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் 'பாகுபலி' படம் மே 15ம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் ராஜமௌலியே வீடியோ அறிவிப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், நாசர், ரம்யா கிருஷ்ணன் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிருக்காத அளவில் ஒரு பிரம்மாண்டமான சரித்திரப் படத்தை உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி மிகவும் கவனத்துடன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தை மே 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள். ஒரு பாடல் தவிர படத்தின் அனைத்து வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம்.

தற்போது இந்தப் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கான இறுதி வடிவம் தென்கொரியாவில் உள்ள சியோலில் தென் கொரியா, சீன கலைஞர்களால் செய்யப்பட்டு வருகிறது.

ராஜமௌலி அவருடைய குழுவினருடன் அங்கிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோடை விடுமுறையில் இந்தப் படம் வெளிவந்தால் நல்ல வரவேற்பு பெறும் என்ற எண்ணத்தில்தான் படத்தை கடந்த சில மாதங்களாக வேகமாக உருவாக்கி வந்தார்கள்.

தற்போதுதான் அதற்கான வேலைகள் முடிவடையும் நிலைக்கு வந்ததால்,  இயக்குனர் ராஜமௌலி படத்தின் வெளியீட்டுத் தேதியை வீடியோ அறிவிப்பாகவே வெளியிட்டு விட்டார்.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் பொதுவான கலைஞர்கள் இடம் பெற்றிருப்பதால் இரண்டு மொழிகளிலுமே இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions