பாகுபலியில் இருந்து கலக்க வரும் தேவசேனா லுக்...

Bookmark and Share

பாகுபலியில் இருந்து கலக்க வரும் தேவசேனா லுக்...

பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் கனவு காவியமான பாகுபலியின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அந்த படத்தின் தேவசேனா லுக் நாளை வெளிவருகிறது.

அந்த கதாப்பத்திரத்தில் பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாகுபலியின் முதல் பாகத்தில் கொஞ்சம் தான் வருகிறாராம். இரண்டாம் பாகத்தில் தான் முழுவதுமாக வருகிறார். அதாவது அவர் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாவார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் போஸ்டரில் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் மிகப்பிரமாண்டமான அருவி பின்னணியில் சிவலிங்கத்தை தனது தோளில் சுமந்து வருகிறார்.

அதுவும் அவர் தனது ஆஜானுபாகுவான உடல் அமைப்பில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மொத்தத்தில் இந்த படம் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.   இது குறித்து இயக்குனர் ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் மகிழ்ச்சி தருகின்றது. தேவசேனாவின் லுக் மே 6யில் வெளியாகும்..என்று குறிப்பிட்டு உள்ளார்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions