'பாகுபலி' இசை வெளியீடு...பிரம்மாண்ட திட்டம்...!

Bookmark and Share

'பாகுபலி' இசை வெளியீடு...பிரம்மாண்ட திட்டம்...!

இந்தியத் திரையுலகில் ஷங்கர் இயக்கியுள்ள படங்களை விட மிகவும் பிரம்மாண்டமான ஒரு படமாக தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டையும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.

இப்படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் உள்ளார்கள். இரண்டு பாகமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் மே 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டை இந்த அடுத்த சில வாரங்களுக்குள் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் ஒவ்வொரு மொழிக்கும் தனியாக இசை வெளியீட்டை நடத்துவது ஒரு திட்டமாகவும், அல்லது ஒரே இடத்தில் அனைத்து மொழிக் கலைஞர்களை அழைத்து நடத்தும் மற்றொரு திட்டத்தையும் வைத்துள்ளார்களாம்.

'நான் ஈ' படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பல உலக மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ஒரு சரித்திர காலப் படம் என்பதாலும் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாலும் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தலாம் என இயக்குனர் ராஜமௌலி நினைத்து வருகிறாராம்.

கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு விழா பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?
அனுஷ்கா படத்தை பார்த்துவிட்டு தூக்கத்தை தொலைத்த முன்னணி நடிகரின் மனைவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions