பாகுபலிக்காக தூய தமிழில் வசனம் எழுதிய மதன் கார்க்கி!

Bookmark and Share

பாகுபலிக்காக தூய தமிழில் வசனம் எழுதிய மதன் கார்க்கி!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் பூம் பூம் ரோபோ டா, இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ, கோ படத்தில் என்னமோ ஏதோ போன்ற பாடல்களின் ஹிட்டுக்கு பிறகு பிசியான பாடலாசிரியராகி விட்டார் மதன்கார்க்கி.

அதேபோல் லிங்காவில் அவர் எழுதிய மேனா கேசோலினா பாடலும் சூப்பர் ஹிட்டானது. இப்படி பாடல்களில் ஒருபக்கம் பிசியாக இருக்கும் மதன்கார்க்கி, முதன்முறையாக எந்திரன் படத்திற்கு வசனம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து குட்டிச்சாத்தான், நண்பன், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வை ராஜா வை, மாஸ் ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதியவர். தற்போது தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பாகுபலி படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கும் வசனம் எழுதியிருக்கிறார். அதோடு, பாகுபலி சரித்திர காலத்து படம் என்பதால், தற்கால தமிழ் மட்டுமின்றி, சங்கத்தமிழ் வார்த்தைகளிலும் வசனம் எழுதியுள்ளாராம்.

அந்தவகையில், இந்த படத்துக்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவ்வப்போது வசனம் எழுதி வந்த மதன்கார்க்கி, இந்த படத்தின் வசனங்களை நடிகர் நடிகைகள் அனைவருமே மனப்பாடம் செய்து கொண்டு நடித்ததாக சொல்கிறார்.

மேலும், இந்த படத்திற்காக போடப்பட்டிருந்த செட் ஒரு புதிய உலகத்தை காண்பித்ததால் புதுமையான தூய தமிழ் வார்த்தைகள் தன்னையுமறியாமல் வந்து விழுந்ததாக சொல்லும் மதன்கார்ககி, தமிழ் வசன உச்சரிப்புகள் சரியாக வர வேண்டும் என்பதற்காக படத்தின் டப்பிங் பணிகள் நடந்தபோது கடைசி வரை தானும் பங்கேற்றாராம்.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து
மதனை 6-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட்டு எச்சரிக்கை
பஜிராவ் மஸ்தானி பட வசனம் குறித்து விளக்கும் மதன் கார்க்கி
பாப்புலராகி வரும் மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions