வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!

Bookmark and Share

வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!

தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியம் பாகுபலி. மகதீரா, நான் ஈ படங்களை இயக்கிய ராஜமௌலி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வௌியாக இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த இப்படம், தற்போது முதல்பாகத்திற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பாகுபலி படத்தின் 2 நிமிட டிரைலர் இன்று மாலை 5 மணியளவில் வௌியிடப்பட்டது.

பிரமாண்ட அரண்மனை, அழகு நீர்வீழ்ச்சி, ஆக்ரோஷமான போர்க்கள காட்சிகள் என டிரைலரை பார்க்கும்போது, ஹாலிவுட்டில் வௌியான டிராய் மற்றும் 300 ஸ்பார்ட்டர்ன்ஸ் படம் பார்த்த ஒரு பீலை தருகிறது. இது எல்லாவற்றுக்கும் மேலாக கீராவணியின் பின்னணி இசையும் மிரட்டுகிறது.

ராஜமௌலியின் இரண்டரை வருட உழைப்பு 2 நிமிட டிரைலரில் பரதிபலிக்கிறது. 2 நிமிட டிரைலரே படத்தின் மீதான  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகினி உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பாகுபலி படம் ரிலீஸாவதால் மூன்று மொழிகளிலும் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions