மலையாளத்திலும் வெளியாகும் பாகுபலி

Bookmark and Share

மலையாளத்திலும் வெளியாகும் பாகுபலி

மே மாதம் திரைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் அப்படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் விசுவல் எபெக்ட் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் இந்தியிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படம் மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் குழுவினர் டுவிட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.

பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் போன்ற பிரபலங்கள் இப்படத்தில்  நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகின்றது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!
பாகுபலி படப்பிடிப்பு தளத்தை படம்பிடித்த 360 டிகிரி சுழலும் கேமரா
பாகுபலி ரிலீஸ் நேரத்தில் கேரள தியேட்டர்கள் ஸ்ட்ரைக் அபாயம்!
\'பாகுபலி\' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி
வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!
பாகுபலி அருங்காட்சியகம் - ராஜமௌலி திட்டம்
125 வினாடிகள் ஓடும் பாகுபலி ட்ரைலர்
\'பாகுபலி\' வெளியீடு ஜுலை மாதம் தள்ளி வைப்பு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions