பாகுபலி 1ம் பாகத்தின் பெயர் இதுதானா...!

Bookmark and Share

பாகுபலி 1ம் பாகத்தின் பெயர் இதுதானா...!

பிரபல இயக்குனரான ராஜமௌலியின் மிகப்பிரமாண்டமான திரைக்காவியமான பாகுபலி 1ம் பாகத்தின் பெயர் பாகுபலி தி பிகினிங் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் நிற்பது போலவும், அதற்கு கீழே பாகுபலி தி பிகினிங் என்ற வாசகங்கள் இடம் பெற்று உள்ளது.

இதன் மூலம் பாகுபலி 1ம் பாகத்தில் பாகுபலியின் இளமை காலத்தை பற்றியதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிரபாசுக்கும், அழகு தேவதையான தமன்னாவுக்கும் இடையே ஏற்படும் காதல் காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த படத்தில் பிரபல ஹீரோவான டகுபதி ராணா, பிரபாசுக்கு சமமான எதிரியாக பல்லால தேவா என்ற வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். சமீபத்தில் வெளியான டீசரில் ராணாவின் வலிமையான உடல் அமைப்பை வெளிக்காட்டும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது.

இதில் பிரபல நடிகை அனுஷ்கா நடிக்கிறார். முன்னாள் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனும் ராஜமாத்தா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர்களான பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யர்லாகத்தா ஆகியோர் இணைந்து ஆர்க்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் முடியாத காரணத்தினால் தான் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவதாக கூறப்படுகின்றது. இந்த படம் அநேகமாக வரும் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!
பாகுபலி படப்பிடிப்பு தளத்தை படம்பிடித்த 360 டிகிரி சுழலும் கேமரா
பாகுபலி ரிலீஸ் நேரத்தில் கேரள தியேட்டர்கள் ஸ்ட்ரைக் அபாயம்!
\'பாகுபலி\' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி
வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!
பாகுபலி அருங்காட்சியகம் - ராஜமௌலி திட்டம்
125 வினாடிகள் ஓடும் பாகுபலி ட்ரைலர்
மலையாளத்திலும் வெளியாகும் பாகுபலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions