'பாகுபலி' வெளியீடு ஜுலை மாதம் தள்ளி வைப்பு...

Bookmark and Share

'பாகுபலி' வெளியீடு ஜுலை மாதம் தள்ளி வைப்பு...

இந்தியத் திரையுலகின் பெருமைக்குரிய படமாகத் தயாராகி வரும் 'பாகுபலி' திரைப்படம் மே 15ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது படத்தின் வெளியீட்டை ஜுலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் ராஜமௌலி சற்று முன்னர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இதுக்கு முன்னாடி பாகுபலி படத்தோட முதல் பாகத்தை மே 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.

ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், எஃபெக்ட்ஸ் வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. அதனால் படத்தின் வெளியீட்டை ஜுலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம்.

மே 31ம் தேதியன்று 'பாகுபலி' படத்தின் டிரைலரை வெளியிட உள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார். மொத்தம் 17 எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோக்களில் 600 பேர் இரண்டு ஷிஃப்ட்களாக வேலை பார்த்தும் 'பாகுபலி' படத்தின் எஃபெக்ட்ஸ் காட்சிகளை முடிக்க முடியவில்லையாம்.

மே 1ம் தேதி முதல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களின் போஸ்டர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். 'பாகுபலி' திரைப்படத்தை இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!
பாகுபலி படப்பிடிப்பு தளத்தை படம்பிடித்த 360 டிகிரி சுழலும் கேமரா
பாகுபலி ரிலீஸ் நேரத்தில் கேரள தியேட்டர்கள் ஸ்ட்ரைக் அபாயம்!
\'பாகுபலி\' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி
வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!
பாகுபலி அருங்காட்சியகம் - ராஜமௌலி திட்டம்
125 வினாடிகள் ஓடும் பாகுபலி ட்ரைலர்
மலையாளத்திலும் வெளியாகும் பாகுபலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions