பாகுபலியில் ஹீரோவுக்கு சவால் விடும் ராணா!

Bookmark and Share

பாகுபலியில் ஹீரோவுக்கு சவால் விடும் ராணா!

பிரபல இயக்குனரான ராஜமௌலியின் மிகப்பிரமாண்டமான திரைக்காவியமான பாகுபலியில் பிரபல ஹீரோவான டகுபதி ராணா, யங் ரிபல் ஸ்டார் பிரபாசுக்கு சமமான எதிரி வேடத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

அதாவது ஹீரோ பிரபாசுக்கு சவால் விடும் பல்லால தேவா கதாபாத்திரம் ஆகும். இதில் பிரபல நடிகை அனுஷ்கா நடிக்கிறார். தற்போது அந்த படத்தில் அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை கொண்ட டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த டீசரில் அவரது வலிமையான உடல் அமைப்பை வெளிக்காட்டும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதால், அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தை தரும். அவர் ஆவேசமாகவும், வீரமாகவும் உள்ள காட்சிகளை உள்ளடக்கிய புதிய போஸ்டர்களும் வெளிவந்துள்ளது.

அதிலும் ராணா அசரவே வைக்கிறார். வரும் நாட்களில் இது போன்ற போஸ்டர்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய டீசர் மற்றும் போஸ்டர்களால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் முடியாத காரணத்தினால் தான் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவதாக கூறப்படுகின்றது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions