பாகுபலி படம் விரைவில் சர்வதேச வெளியீடு

Bookmark and Share

பாகுபலி படம் விரைவில் சர்வதேச வெளியீடு

ஏற்கெனவே பாகுபலி திரைப்படம் உலக அளவில் வெளியாகிவிட்டது. தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் சுமார் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் படமாக இருந்தது.

ஆனால், சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும், மற்ற உலக நாடுகளிலும் வெளியிடப்படும் போது அவ்வளவு நீளம் படம் இருந்தால் சுவாரசியம் குறைந்து விடும் என்பதற்காக படத்தின் நீளத்தைக் குறைத்துள்ளார்கள்.

சுமார் 23 நிமிடங்களுக்கான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதைத்தான் புசான் நகரில் நடக்க உள்ள திரைப்பட விழாவிலும் மற்ற உலகப் பட விழாக்களிலும் திரையிட உள்ளார்கள்.சர்வதேச ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் படத்தை மறுபடியும் எடிட் செய்திருக்கிறார்கள்.

தி இன்கிரடிபிள் ஹல்க், கிளாஷ் ஆப் த டைட்டன்ஸ், டேக்கன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு படத்தொகுப்பாளராக இருந்த வின்சென்ட் டபைல்லோன் பாகுபலிபடத்தின் சர்வதேசப் பதிப்பை எடிட் செய்து கொடுத்துள்ளார். இதற்காக அவர் சில மாதங்களுக்கு முன்பே ராஜமௌலி குழுவில் இணைந்துவிட்டார்.

புசான் திரைப்பட விழாவைத் தொடர்ந்து இதுவரை பாகுபலி  படம் வெளியிடப்படாத பல நாடுகளில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் பாகுபலி படத்தின் வசூல் 600 கோடியைத் தாண்டியுள்ளது. மற்ற நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தால் மேலும் வசூல் சாதனையைப் புரியவும் வாய்ப்புள்ளது எனப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions