'பாகுபலி' டிரைலர் புயல், 'ருத்ரமாதேவி' தாங்குமா ?

Bookmark and Share

'பாகுபலி'  டிரைலர் புயல்,  'ருத்ரமாதேவி'  தாங்குமா ?

'பாகுபலி, ருத்ரமாதேவி'  இரண்டு படங்களும் தெலுங்கு இயக்குனர்களால் எடுக்கப்பட்டு வரும் படம். இரண்டு படங்களிலுமே தமிழ்க் கலைஞர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சரித்திர காலப் படங்கள் உருவாகி அடுத்தடுத்து வெளியீட்டிற்குத் தயாராக உள்ள நிலையில் இரண்டு படங்களையும் பற்றிய 'கம்பேரிசன்',  அதாவது ஒப்பீடு கண்டிப்பாக எழும்.

ஏனென்றால் இரண்டு படங்களுமே சரித்திரப் படங்கள். இரண்டு  படங்களிலும் அனுஷ்காதான் கதாநாயகி. நேற்று வெளியான 'பாகுபலி' படத்தின் டிரைலர் இந்திய அளவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் வெளியான 'ருத்ரமாதேவி' டிரைலருடன் ஒப்பிடும் போது 'பாகுபலி' டிரைலரின் தரம் பல மடங்கு உயரத்தில் இருப்பது உண்மை.

'பாகுபலி'  படத்தின்  டிரைலரில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன. நிச்சயம் இந்தப் படம் இந்திய திரையுலகைப் பற்றி பெரிய அளவில் பேசப்பட வைக்கும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், 'ருத்ரமாதேவி' படத்தின் டிரைலர் வெளியான போதே அந்த டிரைலரில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் சாதாரணமாக இருந்ததாக  விமர்சனம் எழுந்தது.

இப்போது 'பாகுபலி' படத்தின் டிரைலர் வந்த பிறகு அந்தப் போட்டியை 'ருத்ரமாதேவி' சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போது பட வெளியீட்டிலும் இரண்டு படங்களும் மோதிக் கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது.

 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions