பாகுபலி படத்தை வாங்கிய ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ்

Bookmark and Share

பாகுபலி படத்தை வாங்கிய ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ்

சிலவருடங்களுக்கு முன்னர், ஈயை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட நான் ஈ படம் தெலுங்குப்பட இயக்குநர்  எஸ்.எஸ். ராஜமௌலிக்கு இந்திய அளவில் பேரும் புகழையும் தேடிக் கொடுத்தது.

குறிப்பாக தமிழ்நாட்டிலும்  எஸ்.எஸ். ராஜமௌலியை பிரபலமாக்கிவிட்டது நான் ஈ திரைப்படம். 'நான் ஈ' படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் 'பாகுபலி'.  

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள  இப்படத்தை தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியிட இருந்தனர். ராஜமௌலி கேட்டுக் கொண்டதால் தற்போது பாகுபலி என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியாகிறது.

இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  தமிழில் இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வாங்கி உள்ளது. தமிழகம் முழுக்க ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் சார்பில் ராமநாராயணனின் மகன் முரளி வெளியிடுகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர்  வெளியாகிவிட்டது. என்றாலும் படத்தின் புரமோஷனுக்காக, 'பாகுபலி' படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழாவை இன்று சென்னையில் நடத்துகின்றனர்.  

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி, 'பாகுபலி'யில் நடித்துள்ள பிரபாஸ், ராணா,  அனுஷ்கா, தமன்னா ஆகியோர் ஹயாத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். சில முக்கிய மீடியாக்களைமட்டும் அழைத்துள்ளனர்.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்
லொள்ளு சபா டைரக்டருடன் கைகோர்த்த சந்தானம்
நாடகத் துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
வெற்றியை குவிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..!
ஆரம்பம் தொடர்ந்து வீரம் படம் வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions